தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாகவே பிரபல நடிகர்களின்,நடிகைகளின் குழந்தைகள் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.அந்த வகையில் அஜீத்,விஜய் என பல பிரபலங்களின் மகன்,மகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
மேலும் தற்பொழுது நடிகர் சூர்யாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் சூர்யா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா சூர்யாவின் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுளளார்.
இந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, அவர் மகன்,மகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவின் மகன்,மகளும் இவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டார்கள் என ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.