விஜய் டிவி பிரபலம் ராஜலட்சுமி பிக்பாஸ் போட்டியாளர் தாமரைச்செல்வி குறித்து பேசிய வீடியோ இதோ.

raja-laxmi-and-thamarai-
raja-laxmi-and-thamarai-

விஜய் தொலைக்காட்சியில்  சீசன் சீசன் ஆக நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் சூப்பர் சிங்கர் 6 வது சீசனில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர்கள் செந்தில் மற்றும்  ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் இதற்கு முன் சில கிராம நிகழ்ச்சிகளில்  இருவரும் இணைந்து கிராமப்புற பாடல்களைப் பாடி வந்தனர்.

ஆனால் இவர்களுக்கு  மிகப்பெரிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.  மேலும் இந்த ஆறாவது சீசனில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் பைனல்ஸ் வரை சென்று செந்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பின்பு இந்த நிகழ்ச்சியின் மூலம் பல திரைப்படங்களிலும் பாடல்கள் பாட வாய்ப்புகள்  கிடைத்துள்ளது.

அதிலும் ராஜலட்சுமி சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் பாடிய “சின்ன மச்சான்” பாடல் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெருமளவில் டிரெண்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஏ சாமி வாயா சாமி” என்ற  பாடல் செம ஹிட் அடித்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் தாமரைச்செல்வி பற்றி பேசியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் இறுதி கட்டத்தை நோக்கி சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற இருகிறது. மேலும் இதில் டாப் டென்னில் வந்துள்ள தாமரைச்செல்வி இவர்  நாடகத் துறையில் இருந்து வந்துள்ளவர் மேலும் இவர் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் வந்திருந்தாலும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

தற்போது தாமரைச்செல்வி குறித்து சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி தாமரைச்செல்வி அக்காவை  நான் பத்து வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன். அப்பொழுது எனக்கு நல்ல பழக்கம் அவர்கள். பின்பு அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷம் மேலும் இது ஒரு நல்ல முயற்சி எங்கேயோ இருந்த ஒரு நாடக கலைஞருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மேடையில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள் இது நாடக துறைக்கு பெருமையைச் சேர்க்கும் எனவும் கூறியுள்ளார். இதோ அவர் கூறிய அந்த வீடியோ.