நடிகர் சிம்பு சமீபகாலமாக நல்ல கதைகளில் நடித்து வருவதால் அவருடைய வெற்றி சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது கடைசியாக கூட இவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்தன. இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் கிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்து “பத்து தல” படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ஒரு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி, கௌதம் வாசுதேவ் மேனன், சென்றாயன், பிரியா பவானி சங்கர், கலையரசன் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர்.
அண்மையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பஸ்ட்ல போஸ்டர் போன்றவை.. வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது அதனைத் தொடர்ந்து இந்த படம் குறித்தும், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இசை வெளியீட்டு விழாவில் பேசியது இன்னமும் படத்தை பார்க்க அதிகமாக தூண்டிவிட்ட நிலையில் இன்று பத்து தல படம்..
கோலாகலமாக காலையில் ரிலீஸ் ஆனது படத்தை பலரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர் இதுவரை முதல் பாதி முடிந்துள்ளது இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அதன்படி முதல் பாதி சூப்பர் ஸ்டோரி, ஸ்கிரீன் ப்ளே சூப்பர் எனவும், மாஸான இன்டர்வெல் எனவும் கூறி இருக்கின்றனர்.
இரண்டாவது பாதியை பார்க்க ஆர்வமாக இருக்கிறது என கூறி கமென்ட் அடித்தும் வருகின்றனர். பத்து தல படத்தின் முதல் பாதி எதிர்பார்க்காத தருணங்களால் நிரம்பி உள்ளது திரைகதை சுவாரஸ்யமாக இருக்கிறது எதிர்பாராத திருப்பங்களுடன் உங்களை ஈர்க்கப்படுகிறது அது மட்டும் இன்றி கௌதம் கார்த்திக்கு சரியான படம் கூறி உள்ளனர். இதோ அந்த டுட்டர் பதிவுகளை நீங்களே பாருங்கள்.