சிம்பு வேற லெவல்.. வெந்து தணிந்தது காடு படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ.!

venthu thaninthathu kaadu
venthu thaninthathu kaadu

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்பொழுது இன்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி உள்ளது. மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீஎன்ரி கொடுத்த சிம்பு இவருடன் நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் பாஸ்சிட்டி யூ கமெண்ட்கள் கிடைத்துள்ள நிலையில் இந்த படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படத்தினை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் இந்த படத்தினை தயாரித்துள்ளார். இதற்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இந்த திரைப்படங்களுக்கு பிறகு சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வாறு மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகி வந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்கள் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு இந்த படத்திற்காக 20 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்து தன்னுடைய ஸ்டைலை மாற்றினார். மேலும் சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் முதல் நாள் காட்சி வெளியான நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் பகிர்ந்து இந்த படத்தில் சாதாரண மனிதன் எப்படி டானாக மாறுகிறான் என்பதே கதை. ஆரம்பத்தில் நார்மலாக ஆரம்பித்து போகப் போக மிகவும் இன்றஸ்ட்டிங்கான காட்சிகள் இருந்து வருவதால் தியேட்டர் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருப்பதாகவும் சிம்பு இந்த படத்திற்காக பெரிய அளவில் உழைத்து உள்ளதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.இந்த படம் வேற லெவலில் இருப்பதாகவும், சிம்பு நடிப்பிற்கு கண்டிப்பாக அவார்ட் கிடைக்கும் என ட்விட்டர் பதிவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.