பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி.இவர் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்தார் அதன் பிறகு தனது சிறந்த நடிப்பு திரைப்படத்தின் மூலம் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு தொடர்ந்து அடுத்தடுத்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருவதால் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் என அடுத்தடுத்து திரைப்படங்களை வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசாக காத்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் இயக்குனர் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் பட இயக்குனர் C.S. அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கிறது.
மேலும் கிரைம் ஸ்பெஷல் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.கொலை திரைப்படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌவுத்ரி, முரளி ஷர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கொலை திரைப்படத்தினை பிலிம்ஸ் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் கொலை திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.