தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வருவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த தகவல் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிருந்தா இயக்கத்தில் முதல் படமாக ‘ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் இரண்டாவது படமாக தக்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரெய்லரின் ஏராளமான காட்சிகள் சிறைக்குள் இருப்பது போன்று ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹிருது ஹிரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே சுரேஷ், முனிஸ்கான், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் ஏராளமான திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை அடுத்து இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க பிரேஷ் குருசுவாமி ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் – ரியா சிபு தயாரித்துள்ளனர்.