தமிழ் சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஹாலிவுட், பாலிவுட் என தொடர்ந்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியா சினிமா அளவில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.
இந்த வகையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், மாறன் திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ட்ரெய்லரில் நடிகர் தனுஷ் டெலிவரி பாயாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பாரதிராஜா தனுஷின் தாத்தாவாகவும், பிரகாஷ்ராஜ் தனுஷிற்கு அப்பாவாகவும் நடித்துள்ளார். மேலும் இவர்களைத் தொடர்ந்து தோழியாக வரும் நித்தியா மேனன் அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறார்.
இந்த ட்ரெய்லர் 2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடுகிறது மேலும் இந்த ட்ரெய்லர் வெளியான குறைந்த நேரத்தில் அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை மித்திரன் ஜெகவர் இயக்குகிறார் மேலும் பிரியா பவானி சங்கர்,ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இவர்களைத் தொடர்ந்து அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைகிறார்கள்.
கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்படையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியே வந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து நடிப்பில் வெளிவரும் அனைத்து தனுஷ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலத்தின் ட்ரெய்லர்..
A glimpse into Pazham's life.#Thiruchitrambalamtrailer out now💥
▶️ https://t.co/x6uSk3OVOc@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas
— Sun Pictures (@sunpictures) August 7, 2022