இதுக்கு அப்புறம் என்ன யாரும் தேடா தீங்க ஊருக்குள்ள போக போற பாருக்குள்ள.!வெளியானது சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்.!

Santhanam

வெள்ளி திரையில் முதலில் காமெடி நடிகனாக நடித்து பின்பு பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கியவர் தான் சந்தானம்.

இவர் முதலில் காமெடி நடிகனாக இருந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவரது நடிப்பில் வெளியான தில்லுக்குதுட்டு,A1,டகால்டி,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,பிஸ்கோத் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

மேலும் சந்தானம் தற்போது பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டிரைலரை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சந்தானம் இந்த திரைப்படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த ட்ரெய்லர்.