லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இதில் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் அவர்களில் ஒருவராக சாந்தனு பாக்யராஜ் நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவில் காலடி எடுத்து வைத்து நடித்தார்.
இந்த படத்தில் இவரது ரோல் சிறிதாக இருந்தாலும் அந்த ரோலில் கச்சிதமாக நடித்து சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார் மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 96 பட நடிகை கௌரி கிஷன் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாந்தனு பாக்யராஜ் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருடன் இணைந்து அதுல்யா ரவி, மனோபாலா, யோகிபாபு, மயில்சாமி, மதுமிதா, பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் ராவணகோட்டம் என்ற திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அந்த திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதோ முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர்.