மிகவும் மிரட்டலாக நடித்துள்ள அருண்விஜய் பார்டர் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ.!

arun-vijay

தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் அருண்விஜய் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டே வந்தது.

ஆனால் இவரது திரைப்படங்கள் எதற்காக ரசிகர்கள் மத்தியில் தோல்வி அடைகிறது என்று பார்த்தால் இவர் இதுவரை நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை ஆனால் இதனைப் புரிந்துகொண்ட அருண் விஜய் தற்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ஏற்று நடித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததால் மட்டுமே தற்போது இவருக்கு அதிக பட வாய்ப்பு கிடைப்பதாகவும் பலரும் கூறி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் அருண் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பார்டர்.அருண் விஜய் இந்த திரைப்படத்திலும் ஒரு புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவருடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ராவும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளதால்.

இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இதனைத்தொடர்ந்து பலரும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என கேட்டு வந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் மிகுந்த ஆவலுடன் இவர் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.