தமிழ் திரையுலகில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தவர் தான் ஜெயம் ரவி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.
இவர் நடித்து வரும் எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக தான் அமைகிறது அந்த வகையில் இவர் நடித்திருந்த பூலோகம், டிக் டிக் டிக், சன் ஆப் மகாலட்சுமி போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் ஜெயம் ரவி தற்போது பூமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகி ஜெயம் ரவி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஓட்டிட்டு தளத்தில் வெளியகயுள்ளது.
மேலும் இந்த ட்ரெய்லரை பார்த்த ஜெயம்ரவி ரசிகர்கள் ட்ரெய்லர் செம சூப்பராக இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.