வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். மேலும் மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டும் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் பல நடிகர் மற்றும் ரசிகர்களின் ரோல் மாடலாக இவர் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி அன்று மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ்சாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தினை வெளியிட இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது இந்த திரைப்படத்தின் டிரைலரில் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். மேலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் அவருடைய ரசிகர்கள் மட்டும் நன்றி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.
கமலஹாசனின் தசாவதாரம் படத்தை விட அதிக கேட்டபில் நடிகர் விக்ரம் இப்படத்திற்காக போட்டுள்ளார் என்பதை அவர் பல மேடைகளில் கூறியிருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்,வெளிநாட்டில் பிரம்மாண்ட காட்சிகள், சேசிங் காட்சிகள் போன்றவை இடம்பெற்ற உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இசை பின்னணி மற்றும் ஹரிஷ் கண்ணனின் கேமரா படத்தின் லைட்டாக உள்ளது. இவ்வாறு கோபுரா படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.