பல கனவுகளுடன் இருக்கும் பெண்ணை அடுப்பங்கரையில் தள்ளிய கணவர் மற்றும் மாமனார்.. ஸ்வர்யா ராஐஜேஷ் நடித்துள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன், படத்தின் டிரைலர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகையை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெரும் கனவுடன் ஒரு வீட்டிற்கு மருமகளாக செல்லும் ஒரு பெண் தனது ஆசை, கனவுகள் ஆகியவற்றை முடக்கி விட்டு வெறும் அடுப்பங்கரையில் மட்டுமே வேலை செய்யும் நிலைமை ஏற்படுகிறது.

கணவர், மாமனார் இருவரும் அதிகார தோரணையில் கட்டளை போடுகிறார்கள் எனவே அவர் எப்படி சமாளித்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதே தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் கதை. இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தடுத்திருக்கிறார் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் மலையாளத்தில் நடிகை நிஷா சஜயன் நடித்த கேரக்டரில் தான் தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தினை ஆர் கண்ணன் இயக்கியிருக்கிறார் மேலும் சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிய வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவிந்தர் நடித்திருக்கிறார் இவர் பாடகி சின்மயின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை தொடர்ந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.