தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் தீபாவளி அன்று ரிலீஸ்சாக இருக்கும் திரைப்படம் தான் பிரின்ஸ். இந்தப் படத்தின் பற்றிய அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பெரியதும் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஆவலாக இருந்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என பட குழுவினர்கள் அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்த ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
மேலும் ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே பயங்கர கலவரமாக இருக்கிறது பிறகு சத்யராஜ் இன்னுமா சாதி மதம் பெயரை சொல்லி அடிக்கிறீங்க நாம எல்லோரும் ஒரே இரத்தம் என்று கூறுகிறார் மேலும் அங்கே இருப்பவர்களின் கையை கீரி ஒரே ரத்தமாக இருக்கிறது. இவ்வாறு சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் என்னோட ரத்தம் சிவப்பு, என்னோடது லைட் பிங்க் கலர் என காமெடி உடன் சிவகார்த்திகேயனின் முகம் காட்டப்படுகிறது.
பிறகு ஸ்கூல் டீச்சராக வரும் சிவகார்த்திகேயன் மீது ஏகப்பட்ட புகார்கள் வர அதில் குழந்தைகளை புக்கு பார்த்து எக்ஸாம் எழுத சொல்வது அதற்கு ஒரு காரணம் சொல்வது சக ஆசிரியரை மேல் காதல் கொள்வது என்று சிவகார்த்திகேயன் செய்த லூட்டிகள் காண்பிக்கப்படுகிறது. அதிலும் 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மேயர் இந்தியாவில் இருக்கும் பெண்கள் எல்லாம் என்னோட சகோதரிகள் இதனால் தான் வெளிநாட்டு பெண்ணை காதலித்தேன் எனவும் வசனம் பேசுகிறார் இதனால் கைத்தட்டளைகளையும் பெறுகிறார் சிவகார்த்திகன் .
சத்யராஜ், ராகுல் தாத்தா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பிரேம்ஜி அமரன் எங்கே என்று கேட்க தோன்றுகிறது. ஆனால் பிரேம்ஜி அமரனின் மாஸ்க் போட்ட நபர் ஒருவர் தான் தெரிகிறார் எனவே பிரேம்ஜி அமரன் நடித்துள்ள கதாபாத்திரத்தை மட்டும் மிகப்பெரிய சஸ்பென்ஸ்சாக வைத்திருக்கிறார்கள் தற்பொழுது இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருந்து வருகிறது.