தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது சரியான கதையாம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்காமல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி வருபவர் தான் நடிகர் சிம்பு.சில வருடங்களுக்குப் பிறகு இவருடைய என்ட்றி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெந்த தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவன் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது அதில் சில சமயம் உண்மையை சொல்றது கதை சொல்வதை விட கஷ்டம் என கௌதம் வாசுதேவன் குரலில் ஆரம்பிக்கிறது.மேலும் அந்த ட்ரெய்லர் ஆரம்பித்த ரெண்டு மூன்று வினாடிகளிலேயே சிம்புவை சாதாரண மனிதனாகவும்,கேஸ்டராகவும் காட்டுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் பின்னணி இசையில் காதல், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஒருசேர காமிக்கப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் சிம்பு சாதாரண அழுக்கு சட்டை போட்டுக்கொண்டு பாவமான முகத்தோடு இருக்கும் லுக்கில் காணப்படுகிறார் அதே நேரத்தில் மிகவும் கோபமாகவும் இருக்கிறார். மேலும் ஏ ஆர் ரகுமான் பின்னணியில் உருவான ‘அடங்காத ராட்டினத்தில்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த அப்பு குட்டி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயிண்ட்ஸ் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 8 லட்சம் யூக்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.