அமைதி-ஆக்ரோஷம் என வித்தியாசமாக நடித்திருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது யசோதா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் யசோதா திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் யசோதா கர்ப்பமாக இருக்கிறார்.

அதன் பிறகு அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்தவுடன் ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கும் வகையில் சுற்றி ஏற்பட்டுள்ள சூழ்ச்சி குறித்தும் தெரிந்து கொண்ட பெண் அவர் எப்படி கொந்தளித்து எழுகிறார் என்பதும் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.

இந்த படத்தில் மிகவும் அமைதியான அன்பான கர்ப்பிணி பெண்ணாகவும் ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்கும் ஒரு பெண்ணாகவும் நடிகை சமந்தா நடித்துள்ளார். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சமந்தாய் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்பது உணர முடிகிறது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தை ஹரி ஹரிஷ் இயக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மணி சர்மா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் ரிலீஸ் இருக்காங்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.