கரிகாலன் கடம்பூரில் தன் கைகளால் கொல்லப்படுவான்.. என பல முடிச்சுகள் அவிழ்க்கப்படும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் ட்ரெய்லர் இதோ..

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்டது எனவே ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

இந்த படத்தினை உருவாக்க வேண்டும் என பல பிரபலங்கள் முயற்சி செய்த நிலையில் தற்போது மணிரத்தினம் அதனை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் இரண்டாவது பாகமும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கும் நிலையில் நடிகர், நடிகைகள் அனைவரும் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பட குழு பொன்னியின் செல்வன் பிரபலங்களின் கதாபாத்திர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல் மற்றும் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில் மணிரத்தினம், கமலஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலும் ரேவதி, ஷோபனா, சுகாசினி போன்ற 80 நடிகைகளும் பங்கேற்ற நிலையில் ஏராளமான ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்தில் இருந்த பல விஷயங்களுக்கு இரண்டாவது பாகத்தில் பதில் தெரிந்துள்ளது அந்த பலரும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 பட டிரைலர் தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இதனைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.