தமிழ் திரையுலகை பொறுத்தவரை வித்தியாசமான திரைப்படங்களை கொண்டுதான் பல இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் பழைய காலத்து படத்திலிருந்து கதைகளை திருடுகிறார்கள் மேலும் ஃபேண்டசி போன்ற திரைப்படங்கள் வெளியாகி விட்டால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் துளி கூட சந்தேகமே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்த வகையான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விடும் குறிப்பாக குழந்தைகளை கவர்ந்து விடும் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக ஹாலிவுட் சினிமாவில் பெரும்பாலும் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து தான் வெற்றி கண்டு வருகிறார்கள் ஆனால் ஹாலிவுட்டில் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்களை உடனே தமிழில் டப்பிங் செய்து பல டிவி சேனல்களும் வெளியிட்டு மக்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.
ஆனால் தற்போது தமிழிலும் வித்தியாசமான கதைகளைக் கொண்டு திரைப்படங்கள் இயக்குவதற்கு பல இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் ஆம் குழந்தைகளைக் கவரும்படி முதல் முதலில் தமிழ் சினிமாவில் நாய்க்கு டப்பிங் கொடுத்து ஹாலிவுட் பாணியில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆம் இந்த திரைப்படத்தை ராமலிங்கம் ஸ்ரீநாத் என்பவர் இயக்கியுள்ளார் மேலும் திரைப்படத்திற்கு அன்புள்ள கில்லி என்ற பெயர் வைத்துள்ளார்கள் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் குழந்தைகளை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சில காட்சிகளில் நாய்களை வைத்தும் படத்தை இயக்கி உள்ளார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகிறது மேலும் இந்ததிரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த மக்கள் மற்றும் குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள்.