இந்த தீவுக்கு போனவங்க உயிரோடு மீண்டும் வந்ததில்லை.. பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள புதர் திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

puthar
puthar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் புதர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருந்து வரும் ராபர்ட் மாஸ்டர் முகம் தெரியும் அளவிற்கு பெரிதாக பிரபலமடையவில்லை இந்நிலையில் இவர் வனிதாவை காதலித்து வந்த நிலையை பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் நடன இயக்குனராக பணியாற்றி வந்த இவர் பிறகு வாய்ப்பு பெரிதாக கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகினார் இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் காதலுக்கு வயதில்லை என்று கூறிக்கொண்டே இரட்சிதாவின் பின்னாடி சுற்றி வந்தார்.

எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ராபர்ட் இந்நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறினார். மேலும் பலரும் இவரை விமர்சித்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் இவருக்கு குறைவான வாக்கு கிடைத்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள புதர் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

puthar
puthar

இந்த படத்தை நான் ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெட்சாரா ப்பு ரொடக்ஷன் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தயாராகியுள்ள நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை டாக்டர் அகஸ்டின் இயக்க சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு செய்ய, அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சென்டினல் மக்கள் வாழ்க்கை கதையை மையமாக வைத்த இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் கேரளா, கர்நாடக எல்லைக்குள் அப்பால் உள்ள குரூபா திவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்ட உள்ளார்கள்.