அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் 1995ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பிறகு தொடர்ந்து நல்ல காரியம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

மேலும் இவர் ஹீரோவை தொடர்ந்து வில்லனாகவும் நடித்து கலக்கி வருகிறார் அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் என்னை அறிந்தால் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா உள்ளிட்ட தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்ததால் இவருடைய திரை வாழ்க்கைக்கு பெரிதும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் தற்பொழுது  ஹரிதாஸ் படத்தினை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேல்ன் தற்பொழுது சினம் என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பாலக் லால்வாணி நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் பின்னணி இசையை சமீர் இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக அருண் விஜய் கொலையை யார் செய்தார்.?  எப்படி செய்தார்கள்.? என்பதனை கண்டுபிடிக்கும் வகையில் பல முயற்சிகளை செய்து வருகிறார்.