தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல தடவை மோதிக் கொண்டாலும் கடந்த 8 வருடங்களாக சோலோவாக படங்களை வெளியிட்டு வந்தனர். திடீரென அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித், விஜய் படங்கள் மோத இருக்கின்றன.
இதில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது மேலும் அஜித் இதில் நெகடிவ் கதாபாத்திரத்தில் மரண மாஸாக நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜான் கொக்கன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜய் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே..
நடித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த இரண்டு படத்தின் மொத்த ரன்னிங் டைம், ரீலிஸ் தேதி எப்போ என்பது குறித்து தற்பொழுது நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில்..
அஜித்தின் துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. ஜனவரி 11 ஆம் தேதி துணிவு ரிலீஸ் ஆகிறது. விஜயின் வாரிசு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.