ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த துணிவு திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் இதோ…

thunivu-1

நடிகர் அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் இதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர்கள் துணிவு திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட நிலையில் தற்பொழுது மூன்றாவது போஸ்டரை இயக்குனர் வினோத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த லேட்டஸ்ட் போஸ்டரில் அஜித் ஒரு நாற்காலியில் கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்கிறார் இதனை பார்க்கும் பொழுது அது ஒரு ஆக்ஷன் காட்சியின் போஸ்டர் என தெரிய வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று 29ஆம் தேதி முடிவடைவதாக கூறியிருந்தார்கள்.

அந்த வகையில் சில நாட்களாக சென்னையில் ஒரு பாடலுக்கான கடைபிடிப்பை நடத்தி வந்தார்கள் மேலும் அந்த படத்தில் அஜித் ஒரு சிக்காஸ் நடன காட்சியில் நடித்துள்ளதாக பல முன்னுரை நடிகர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை திரையரங்க பேனர் வடிவில் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என்ற வசனத்துடன் No Guts No Glory என்ற வசனமும் இடம் பெற்று உள்ளது. அதில் வெள்ளை நிற ஆடையில் கூலிங் கிளாஸ் அணிந்து காலரை தூக்கிவிட்டபடி ஒரு கர்வமான பார்வையுடன் அஜித்தின் லுக் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

thunivu
thunivu

இந்நிலையில் பொங்கல் தினம் அன்று வெளியாகும் துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அமெரிக்கா ரிலீஸ் உரிமத்தை சரிகம சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது சமீபத்தில் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

இவ்வாறு துணிவு திரைப்படம் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்துள்ளதாகவும் வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார் இவர்களை தொடர்ந்து சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய், சிபி ஆகியோர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.