இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றன கடைசியாக டெல்லியில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்ததாக ரஷ்யா செல்ல இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் இருந்து அவ்வப்போது அப்டேட் மறைமுகமாகவோ அல்லது படகுழுவோ கொண்டுதான் இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சபீர் போன்ற பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படத்திற்கு முன்பாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார். இப்படம் ஒருவழியாக திரையரங்கில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது மேலும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மக்கள் கூட்டம் அலை அலையாக மோதுகின்றன.
படத்தை பார்த்த ரசிகர்களும் தங்களது விமர்சனத்தை கொடுத்து வருவதால் இன்னும் இந்த திரைப்படம் பல நாட்கள் ஓடும் என எதிர்பார்க்கிறது அந்த அளவிற்கு நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர் படம் வெளியாகிய முதல் நாள் மற்றும் இரண்டு நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்திய நிலையில் மூன்றாவது நாள் வசூலும் வெளியாகியுள்ளது.
முதல் நாள் 6.7 கோடி வசூல் செய்தது இரண்டாவது நாள் 7.25 கோடி மூன்றாவது நாள் 1.71 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஆகமொத்தம் இந்த திரைப்படம் 15.3கோடி வசூல் செய்ததாக கணிக்கப்பட்டுள்ளது