தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி தற்பொழுது பல மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்தார்.
இவ்வாறு நடித்து வந்த இவர் தற்பொழுது ஹோலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவ்வாறு வளர்ந்து வரும் இவர் தொடர்ந்து சிறப்பான இயக்குனர்களுடன் கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதுவே இவர் திரையுலகில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் தற்பொழுது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். யார் இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடந்து வருவதால் மேலும் இவருக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது அதனை வேண்டாம் என தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் இன்று தன்னுடைய பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தொடர்ந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக சோசியல் மீடியாவில் ஏராளமான தகவல் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாத்தி டீசர் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. படிப்பு பிரசாதம் மாதிரி அதை 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு போல விக்காதீங்க என தனுஷ் பேசிய முக்கிய கருத்து ட்ரைலரில் வெளியாகிவுள்ளது. இவ்வாறு தனுஷ் இப்படத்தில் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் வகையில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த டீசர்.