தமன்னா நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி பட டீசர் இதோ.! இந்த வருடம் மட்டும் தமன்னா நடிப்பில் இத்தனை திரைப்படங்கள் வெளியாக இருக்கிறதா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா அடுத்தடுத்து வரிசையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களும் விரைவில் வரிசையாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் தமிழில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகராகவும்,தமன்னா கதாநாயகியாகவும் நடித்த வருகிறார்கள். இதனை தொடர்ந்து போளூர் சங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமன்னா பப்ளி பவுண்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு முன்பாக தமன்னா நடித்துள்ள குருதுண்டா சீதா களம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸ்சாக உள்ளது. இதனைத் தொடர்ந்து போலே சுடியான் மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ்சாக இருக்கிறது.மேலும் இந்த வரிசையில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள திரைப்படம் பிளான் ஏ பிளான் பி இந்தத் திரைப்படத்தினை ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிக்ஸ் தளத்தில் ரிலீஸ்சாக உள்ளது இப்படிப்பட்ட நிலை 7 தற்பொழுது பிளான் ஏ பிளான் பி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.