கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கொஞ்சி பேசினால் என்ன படத்தின் டீசர் இதோ.!

வாரிசு நடிகையாக அறிமுகமாகி பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். ஃபேண்டஸி அட்வென்சர் படமாக 2019ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் தன்னுடைய அப்பா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் தான் பெரும்பாலும் நடித்து வருகிறார். அந்த வகைகள் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்று தேசிய விருதும் பெற்ற ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்கில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்த அன்பிற்கினியால் திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கீர்த்தி பாண்டியன் இயக்குனர் ஷாலினி இயக்கத்தில் கண்ணகி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ரொமான்டிக்கான காதல் படமாக தயாராகி வரும் கொஞ்சம் பேசினாள் என்ன என்ற திரைப்படத்திலும் நடித்த வருகிறார்.இந்த திரைப்படத்தினை கிரி மர்ஃபி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மேலும் கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிர்ஷ் ஆகியோர்கள் ஜோடியாக நடித்து வரும் இந்த திரைப்படத்தில் கௌதம் சுந்தர்ராஜன்,ஆஷிக் பத்ரா, ஆகாஷ், பிரேம்குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சூப்பர் டாக்கீஸ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் லெனின் ஏ மற்றும் ஏ ஆர் செல்வம் ஒளிப்பதிவில் தனசேகர் தொகுப்பு செய்துள்ளார். மேலும் தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார் தற்பொழுது கொஞ்சி பேசினாள் என்ன திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.