பிரபல இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன் நடிப்பில் ஜெய்பீம் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கும் குட் நைட் படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஜெய்பீம் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் திரைப்படத்தினை விநாயகர் சந்திரசேகர் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் நிலையில் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
மேலும் இந்த படம் குறித்த சில போஸ்டர்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் நாயகி மீத்த ரகுநாத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மேலும் ரமேஷ், திலக் பகவதி, பெருமாள் பாலாஜி, சக்திவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் குட் நைட் படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த டீசர் ஜெயம் ரவி தன்னுடைய சோசியல் மீடியாவின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க குறட்டையை மையமாக வைத்த உருவாகியுள்ளது.
தனக்கே தெரியாமல் திடீரென தூங்கும் கதாநாயகன் வேலை செய்யும் இடம் என்று கூட பார்க்காமல் தூங்கி விடுகிறார். இதனால் இவரை திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகியும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். இப்படி குறட்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் குட் நைட் பட டீசர் இதோ..