ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுல்தான் அப்டேட் இதோ.!

sulthan 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜோலித்து வருபவர் நடிகர் கார்த்திக். தற்போது இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.இந்நிலையில் இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். ரெமோ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது எனவே சுல்தான் திரைப்படமும் அதைவிடவும் நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை பிரபல ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பல கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாவதால் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமானது என்னவென்றால் தற்போது உள்ள இளைஞர்களின் க்ரஸ் மற்றும் பல இளைஞர்களின் கனவு என்று சொல்லலாம் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர் இதற்கு முன்பு பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்ததால் இவர் எப்பொழுது தமிழில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்து வந்தார்கள். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பல அப்டேட்கள் வெளிவந்த நிலையில் தற்போது இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சென்சார் குழுவினர்  U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம்.

sulthan
sulthan

இந்தத் தகவலை படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.  சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது.