தற்போது உள்ள நடிகர்கலில் நம்பர் ஒன் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகர் விஜய் இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னும் சண்டைக் காட்சிகள் மற்றும் நடன காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று கடந்த தீபாவளி அன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் அடுத்த வாரம் முதல் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி தான் என்று குறிப்பிட்டு இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து வாரிசு படத்தின் பட குழுவினர் என்னென்ன பிரமோஷன் திட்டங்களை செய்ய உள்ளனர் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிடப்பட பட குழு திட்டமிட்டுள்ளது இந்த பாடலை விஜய பாடியது தான் மேலும் ஒரு சிறப்பு. விஜய் பாடும் இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது வெளியாகும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக வாரிசு படத்திள் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் பேட்டிகள் சமுக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தின் இயக்குனரான வம்சி அவர்கள் அளித்த பேட்டி ஒன்று ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு வாரிசு படத்தில் அமைந்துள்ள பாடல்கள் ரிலீஸ் விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே விழாவாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படக் குழுவினர் அனைவரும் துபாய் சென்று மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு வாரிசு திரைப்படத்தின் டிரைலர் படம் வெளி வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பே வெளியிட பல குழு திட்டமிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த படத்தின் பிரமோஷன் மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் முதல் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எனக் கூறப்படுகின்றனர்.