தமிழ் சினிமாவில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை வரிசையாக பெற்றார்.
இதன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இவ்வாறு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதன் மூலம் இவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நடனமாடும் பாடலும் சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.
இந்நிலையில் தற்பொழுது சமந்தாவை தொடர்ந்து அஞ்சலியும் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிக்கும் Macherla Niyojakavargam படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இத்திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சலி நடனமாடியுள்ள RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடல் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.