நடிகர் விஜய், அஜித்தை ஓவர்டேக் செய்து முதலிடத்தை பிடித்த பிரபல நடிகர்.! ஸ்டார் டோமைன் பத்திரிக்கை வெளியிட்ட தேர்வு இதோ..

vijay-ajith
vijay-ajith

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது அதாவது தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் அதில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தையும் வசூல் ரீதியாக பெரிதாக லாபத்தையும் பார்க்கவில்லை.

ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே இது போன்று இன்னும் சில திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டின் சிறப்பான ஹீரோ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டில் மிகச்சிறந்த ஹீரோக்களாக ஸ்டார் டொமைன் 10 ஹீரோக்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலிடத்தை பிடித்துள்ளார் இவருடைய நடிப்பில் டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது மேலும் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தது.

இரண்டாவது இடத்தினை கமலஹாசன் அவர்கள் பிடித்துள்ளார் இவருடைய நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்றது மேலும் இவர் சின்னத்திரையிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மூன்றாவது இடத்தினை நடிகர் அஜித் பிடித்துள்ளார் இவருடைய நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

அந்த வகையில் இந்த படத்தில் அதிகமான பைக் ரேசிங் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் விளங்குகிறது மேலும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக அஜித் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஸ்டார் டொமைன் லிஸ்டில் விஜய் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் அவரது பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்றது . இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தினை நடிகர் சிம்புக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் தான் மாநாடு. மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெந்து தனிந்தது காடு திரைப்படமும் வெற்றியை பெற்றது.

ஆறாவது இடம் நடிகர் விக்ரமுக்கு கிடைத்துள்ளது இவருடைய நடிப்பில் கோபுரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது மேலும் இவரை தொடர்ந்து ஏழாவது இடத்தினை நடிகர் சூர்யா வுக்கு கிடைத்துள்ளது இவர் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் கவனத்தை பிரிதளவில் இருந்தது.

எட்டாவது இடத்தினை நடிகர் கார்த்திக் பிடித்துள்ளார் இவர் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த மூன்று திரைப்படங்களும் வசூல் செய்தியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. அடுத்தடுத்த இடங்களை நடிகர் தனுஷ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் பிடித்துள்ளார்கள். தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது மேலும் பத்தாவது இடத்தினை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பிடித்துள்ளார் இவர் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் வெற்றியை கண்டுள்ளார்.