தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இது தளபதிக்கு 66ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு குடும்ப சென்டிமென்ட் கதை போல இருக்கும் என்பதால் இந்தப் படத்தில் பல்வேறு டாப் நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
அந்த வகையில் விஜயுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஸ்பு, ஜெயசுதா மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்பொழுது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படக்குழு மூன்று விதமான போஸ்டர்களை வெளியீட்டு அசத்தியது.
இந்த நிலையில் விஜய் வயசானாலும் அழகாகவும், செம்ம ஸ்டைலும், அதே சமயம் உடம்பை ஃபிட்டாக இதுவரை வைத்திருக்க என்ன ரகசியம் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. தளபதி விஜய் காலையில் இரண்டு இட்லி, சட்னி, வெள்ளரிக்காய் சாப்பிடுவாராம்.
மதிய உணவாக சம்பா அரிசியில் சாதம் 200 கிராம் வறுத்த சிக்கன், பச்சைக் காய்கறி கொஞ்சம் சாப்பிடுவாராம் இதற்கிடையில் இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம் இரவு உணவாக ஃப்ரூட் சாலட் சாப்பிடுவாராம் மேலும் ரொம்ப பிரியமான உணவு நம்ம பாரம்பரிய தோசையுடன் சிக்கன் குழம்பு என சொல்லி உள்ளனர்.