உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு விக்ரம் விக்ரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனக்கே உரிய பாணியில் எடுத்துள்ள படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்றவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததற்காக டாப் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளனர் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி பார்க்கையில் விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் இவர் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் சுமார் 60 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. நடிகர் விஜய்சேதுபதி 10 கோடி சம்பளமும், நடிகர் பகத் பாசில் 4 கோடியை சம்பளமும் இசையமைப்பாளர் அனிருத்தை 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில் எடுத்த படங்களுக்கு சம்பளமாக 30 லட்சம் 40 லட்சம் வாங்கி வந்த நிலையில் விக்ரம் திரைப்படத்திற்காக பலமடங்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளார். லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்குவதற்கு சுமார் 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மொத்தமாக 80 கோடி பொருள் செலவில் விக்ரம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கமல் என் கேரியரில் மிக முக்கியமான படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசூலில் அடித்து நொறுக்கும் எனவும் கூறப்படுகிறது.