நாடோடி மன்னன்.! வாத்தி படத்தின் இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதி இதோ.!

vaathi
vaathi

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் அவதார் 2 படம் வெளியானதால் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

அந்த வகையில் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்போது வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை மறுபடியும் மாற்றி ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து வாத்தி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாக உள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி பாடல் வெளியாகி இருக்கிறது இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடல் பொங்கல் தினத்தன்று ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளதாக வாத்தி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள வா வாத்தி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு வாத்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.