வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தின் ரிலீஸ் தேதி இதோ.!

custody
custody

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பல விருதுகளையும் குவித்தது.

அதன் பிறகு சரோஜா, அஜித்தின் மங்காத்தா, பிரியாணி, மாநாடு, உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் நடித்திருக்கிறார் என்றால் பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வருகிறது ஆனால் இவரும் ஒரு நடிகர் என்று பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பதன் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில், விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை, ஜெய் நடிப்பில் வெளியான வடகறி, நலனும் நந்தினியும், முப்பரிமாணம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது  தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகரான நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது.

தற்போது முடிந்த படங்கள் ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் அஜித், விஜய் படங்கள் வெளியாவதால் தங்களுடைய படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி வருகிறார்கள் அந்த வகையில் கஸ்டடி திரைப்படம் மே 12ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் பட குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கஸ்டடி திரைப்படம் வெற்றியடையுமா? ஆடையாதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் நாக சைதன்யா ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாகவும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.