சத்தமே இல்லாமல்.. OTT தளத்தில் வெளியாகும் அஜித்தின் “துணிவு” ரிலீஸ் தேதி இதோ.

thunivu-
thunivu-

நடிகர் அஜித் குமார் மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்கும் படங்களை தேர்வு செய்து  நடித்து வருகிறார் அந்த வகையில் வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து துணிவு திரைப்படம் மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு கொண்ட படம் இந்த படத்தை ஹச். வினோத் தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்தார்.

போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார் அஜித் தனது மாறுபட்ட நடிப்பை படத்தில் காட்டி இருந்தார். துணிவு படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்சை வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்தது நல்ல விமர்சனத்தை பெற்றது.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது உலக அளவில் 220 கோடிக்கு மேல் வசூல் செய்து இப்பொழுதும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் அஜித் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமையும் என பலரும் சொல்லி வருகின்றனர். துணிவு திரைப்படம் வெற்றியை கொடுத்திருந்தாலும்..

அஜித்தும் சரி, படக்குழுவும் சரி பெரிய அளவில் செலிப்ரேஷன் செய்யவில்லை காரணம் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸ் எப்போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததால் அதனை முன்னிட்டு செலிப்ரேஷன் பண்ணவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு மற்றும் அஜித் முகத்தில் அந்த சந்தோஷம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் OTT தளத்திலும் வெளியாகி கலக்கயிருக்கிறது அதற்கான அதிகாரப்பூர்வ தகவலை தான் நாம் பார்க்க இருக்கிறோம். துணிவு திரைப்படம் netflix ott தளத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. netflix நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது இதோ நீங்களே பாருங்கள்.