மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பகத் பாஸில் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் கூட தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
அவர் தெலுங்கு திரைப்படமான புஷ்பா திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் கலக்கியது மட்டுமில்லாமல் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது நடிகர் தன்னுடைய ஆசை மனைவி நஸ்ரியா உடன் இணைந்து மலையாள திரைப்படம் ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழிலும் நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியிட உள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கண்டிப்பாக தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார் அதேபோல விக்ரம் திரைப்படத்தில் நடித்த செம்பன் வினோத் திமிரு படத்தில் நடித்த விநாயகன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தினை பிரேமம் திரைப்படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர் அன்வர் ரஷித் என்பவர்கள் தான் இயக்கி உள்ளார்.