தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் நடிகர் அஜித் தொடர்ந்து பைக்கில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய திரைப்படங்கள் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை கண்டது.
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் அஜித் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் கதை சரியில்லாத காரணத்தினால் விக்னேஷ் சிவன் ஏகே 62விலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.
தற்போது அந்த தகவல் உறுதியாகி இருக்கும் நிலையில் ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. அப்படி சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை காலமான நிலையில் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார் இதனை அடுத்து மே ஒன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியானது.
அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அதற்கான போஸ்டர் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரையிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை இப்படிப்பட்ட நிலையில் சமீப நாட்களாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறாது எனவும் நின்று போய்விட்டதாகவும் ஷாக்கிங் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால், அது உண்மை இல்லை தற்பொழுது வந்திருக்கும் தகவலின் படி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற இருக்கிறது. எனவே இதனால் படம் நின்று விட்டதாக கூறப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.