சினிமாவில் முன்னணி ஜாம்பவான்களை தொடர்ந்து அவரது வாரிசுகளும் தற்போது சினிமாவில் காலூன்றி நடித்து வருகின்றனர்.
ஆனால் அத்தகைய நடிகர்கள் சினிமாவில் நிலைத்து நின்றார்களா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது பல வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் தற்போது அட்ரஸ் இல்லாமல் காணாமல் போயுள்ளனர்.
சிலர் சினிமாவில் இன்றும் ஹிட் படத்தை கொடுக்க முயற்சி செய்கிறார்கள.
அந்தவகையில் சிவாஜியை தொடர்ந்து பிரபு பிரபுவை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.
தற்போது சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முயற்சித்து செய்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த விக்ரம் பிரபு கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பெரும் தோல்வியை தழுவியதால் வெற்றிக்காக போராடி கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் புலிகுத்தி பாண்டியன் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக டாணாக்காரன் என்ற திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உடம்பை நல்லா சிட்டாக வைத்துக் கொண்டு போலீஸ் உடையில் செம்ம மாஸாக இருப்பவனே டாணாக்காரன்.
விக்ரம் பிரபுவுக்கு இதுஒரு நல்லதொரு படமாக அமைய வேண்டுமென என ரசிகர்கள் வேண்டிக்கொண்டு வருகின்றனர்.