தமிழ் சினிமாவில் தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த படத்தில் தற்பொழுது வரையிலும் ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் இவரை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமன், ஐஸ்வர்யா தாத்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும இந்த படத்தில் பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி போன்ற படங்களில் ஒழிப்பதிவு செய்த கோகுல் பினாய் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஐன்ஸ்டீன் பிரபாகரன் இசையமைக்க ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடியா இருக்கும் நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி அன்று வெளியாக இருக்கிறது மேலும் இந்த பாடல் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கையும் எனவும் படகு குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை எனவும் கூறியுள்ள நிலையில் அனைத்து பணிகளும் முடிந்தவுடன் திரைக்கு வரும் எனவும் இந்த தகவலை ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான போஸ்டர் உடன் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.