நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டர்.!

munish-kanth

தமிழ் திரைப்படத்துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவோடுசென்னைகக்கு  வந்தவர்தான் நகைச்சுவை நடிகர் ராமதாஸ் இவர் முதலில் ஒரு சில குறும் படங்களில் தான் நடித்து இருந்தார்.

இவரது ரசிகர்களால் இவருக்கு இன்னொன்று பெயர் இருக்கிறது முண்டாசுப்பட்டி குடும்பத்தின் குறும்படங்கள் நடித்திருந்த போது நகைச்சுவையாக இவர் நடித்ததால் இவருக்கு முனீஸகாந்த் ராமதாஸ் என பெயர் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இவர் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்திருந்த டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமியின் கௌஷ்துப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோ இணைந்து மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தை தயாரிக்க போகிறார்கள்.

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக அமையும் என்று தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

களவாணி படத்தின் உதவி இயக்குனரான கிஷோர் எம் ராமலிங்கம் இந்த படத்தை எழுதி இயக்கப்போகிறார் என்று இப் படக்குழுவினர் தெரிவித்துளளனர்.

தீபாவளியை முன்னிட்டு படப்பிடிப்புகள் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

muneeskanth-in-middle-class
muneeskanth-in-middle-class