அடுத்த படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா இருவரும் வெளியிட்ட பதிவு இதோ.!

nayanthara
nayanthara

வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் காதலிக்க ஆரம்பித்த ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் 2 பேரும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் என பெயர் சூட்டினார். தற்போது அந்த நிறுவனம் கோலிவுட்டில் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளது நல்ல கதையம்சம் கொண்ட புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா,  பாரதிராஜா உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிய ராக்கி படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர் நிறுவனம் கைப்பற்றி விட்டது என்று தான் கூற வேண்டும்.

தற்பொழுது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கூழாங்கல் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு நாங்கள் எப்போதுமே ஆதரவு தருவோம் என கூறி வருகிறார்கள்.

nayanthara
nayanthara