சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் மோகன் ராஜா அவரே வெளியிட்ட பதிவு இதோ.!

mohan-raja
mohan-raja

வெள்ளித்திரையில் பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் தான் மோகன் ராஜா இவர் ரீமேக் படங்களை மட்டுமே எடுத்து வருகிறார் என பல பேச்சுகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஹிட்டடிக்கும் படம் என்னால் இயக்க முடியும் என்பதை காட்டுவதற்கு தனி ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கி அவரைப் பற்றிய கிண்டலாக பேசிய நபர்களின் வாயை அடைத்தார் என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் இவர் அடுத்ததாக விஜயுடன் கைகோர்க்க உள்ளார் என்று பல தகவல்கள் வந்துகொண்டிருந்தது. ஆனால் அது என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.

இந்நிலையில் மோகன் ராஜாவிற்கு மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துருக்கு என்பதை அவரே தனது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

அதாவது தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி இவரை வைத்து மோகன் ராஜா புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம் அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

நடிகர் சஞ்சீவி நடித்த திரைப்படங்கள் பாதிக்கு பாதி ஹிட்டாகும் என்பதை பலருக்கும் தெரியும் அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் சிரஞ்சீவி கைகோர்க்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.