உலகநாயகன் கமலஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ – உற்சாகத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்.

kamal

உலகநாயகன் கமலஹாசன் சமீபகாலமாக அனைத்து விதமான துறைகளிலும் தனது திறமையை காட்ட ரெடியாக இருந்து வருகிறார் சினிமாவே வாழ்க்கை என இருந்த  ஒரு கட்டத்தில்  அதையும் தாண்டி அரசியல், வியாபாரம் அதை தவிர்த்து சினிமாவில் தயாரிப்பாளராகவும், சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வளம் வருகிறார்.

அண்மையில் கூட இவர் அமெரிக்காவில் கதராடை நிறுவனத்திற்காக ஒரு மீட்டிங் சென்று திரும்பிய போது எதிர்பாராதவிதமாக கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதை சுதாகரித்துக் கொண்டு கமல் உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். தற்போது உடல்நலம் சரியாக இருந்தாலும்  சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்போது முழுவதுமாக குணமனடைந்து.

அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் அதிக முனைப்பு காட்டி வருவதால்  மீண்டும் அதில் பணியாற்ற தற்போது ரெடியாக இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலைத் தவிர வேறு எந்த தொகுப்பாளரும் அந்த அளவிற்கு சிறப்பாக கையாள முடியாது என்பதை சமீபத்தில் உணர்ந்து விட்டனர் அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரவேண்டும் மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் கமல் மருத்துவர்களை சந்தித்து  மருத்துவமனைக்கு வெளியே வந்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ பூரண குணமடைந்த நடிகர் கமலின் புகைப்படம்.

kamal
kamal