தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான மாற்றம் காதல் சம்பந்தப்பட்ட படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இயக்குனர் மணிரத்தனம். காலத்திற்கு ஏற்றவாறு தனது படத்தின் தன்மையை மாற்றி அதற்கு ஏற்றார்போல கொடுப்பதால் இப்போதும் அவரது படத்திற்கு நல்லதொரு வரவேற்பு இருக்கிறது.
தற்போது கூட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் தற்போது பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது அந்த வகையில் தாய்லாந்து தொடங்கி ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி என மாறி மாறி பல இடங்களில் செட் போட்டு எடுக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, சரத்குமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து அடைந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது. அந்த வகையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு தயார் ஆகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் தற்போது டப்பிங் முடித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டா பக்கத்தில் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சில பிரபலங்கள் ஜிம்மில் கெத்தாக நிற்கும்.
புகைப்படத்தை தனது என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருவதோடு லைக்குகளையும்அள்ளி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.