“விக்ரம்” படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.!கமல் இதுல என்ன மாதிரி போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

vikram
vikram

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் ஒருவராக இருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் பல்வேறு படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் பாடலாசிரியர் என அனைத்திலும் சிறப்பாக விளங்கினார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் மாபெரும் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசனையும் இவரே தொகுத்து வழங்க உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விருவிருப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் சமீபத்தில் விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பைக்கில் அமர்ந்தபடி உள்ளார் மற்றும் அவருடன் அன்பறிவு மாஸ்டர், இயக்குனர் லோகேஷ், க்ரிஷ், கங்காதரன் ஆகியோர்கள் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தில் நீங்களே பாருங்கள்.