80இன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் மீனா இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அன்புடன் ரஜினி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில வருடங்கள் கழித்து கதாநாயகியாக நடிக்க உருவம் எடுத்தார் இவர் ரஜினி,கமல்,அஜீத் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு நிறைய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.
மேலும் இவரது மகளும் இவரது வழியில் வலம் வருகிறார் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தருப்பார்.
மீனா தற்பொழுது ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதனையடுத்து மீனாவின் புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 44 வயதில் முழு மேக்கப்புடன் சூப்பராக போட்டோவிற்கு போஸ் கொடுத்துஇருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.