தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் நீண்ட நாள்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த அண்ணாத்த திரைப்படம் திடீரென்று இந்த படக்குழுவினரை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது பலருக்கும் தெரியும்.
சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் சீக்கிரம் குணமடைவார் எனவும் அப்போலோ மருத்துவமனை சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
மேலும் சமிபத்தில் அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது அந்த அறிக்கை என்னவென்றால் ரஜினி இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை வந்திருந்த நிலையில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் காரில் அமர்ந்தபடி கையசைக்கும் போட்டோஸ் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அதோடு ஒரு வாரத்திற்கு ரஜினி ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள் ரஜினிக்கு என்ன ஆச்சு என்ன இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்ட அவரது ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் சர்ப்ரைசாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.