தமிழ் திரையுலகில் தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் நடிகை ஜோதிகா.
இவர் 1999ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
முதல் படமே அஜித்துடன் நடித்ததால் தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன்பின் பூவெல்லாம் கேட்டுப்பார் முகவரி, தெனாலி, லிட்டில் ஜான், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, திருமலை, மன்மதன், பேரழகன் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தன.
இதனால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை விரும்பி 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தியா என்ற ஒரு பெண் குழந்தையும், தேவ் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பெற்ற பின்பும் தற்போது சினிமா உலகில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறதே இவர் சமீபத்தில் நடித்த பொன்மகள் வந்தாள், தம்பி, ஜாக்பாட், ராட்ச்சி, காற்றின் மொழி போன்ற படங்கள் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் தொடர்ந்து நடிக்கிறார்.
நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மாவை பார்த்திருப்போம் ஆனால் அவரது அம்மா அப்பாவை பெரிதும் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.
சூர்யா, ஜோதிகா ஆகியோருடன் இணைந்து அவரது அம்மா அப்பா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.