விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியில் ஒன்றுதான் குத் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் புகழ்.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது சாம்பியன்ஸ்,சிரிச்சா போச்சு ஆகிய நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.
அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கினார் மேலும் புகழ் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.அதேபோல் சந்தானம் நடித்து வரும் ஒரு படத்திலும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் புகழின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் புகழ் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் பொழுது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்தப் புகைப்படம்.